அமைச்சர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று குறை நிறைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் : ஜனாதிபதி

மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் வருடம் முதல் அனைத்து அமைச்சர்களும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் மாதாந்தம் மாவட்டங்களுக்கு சென்று கண்காணிக்க வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு தடவையேனும் அனைத்து மாவட்டத்திற்கும் பயணம் செய்து, அபிவிருத்தித்திட்டங்களின் குறை நிறைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக அறிவித்துள்ளதாகவும் இதனால் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்து அதற்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.