பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கடுமையாக திட்டிப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அதற்காக மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், ஒபாமாவை நரகத்திற்கு செல்லுங்கள் என்று திட்டி அதிபர் ரோட்ரிகோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் இடையிலான ஆயுத விற்பனை தொடர்பான விவகாரத்தில் இத்தகைய கருத்தினை அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ரோட்ரிகோ கூறுகையில், “அமெரிக்கா சில ஆயுதங்களை எங்களுக்கு விற்பனை செய்ய மறுக்கிறது. இருப்பினும் அதுப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் எங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தயாராக உள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சீனா எதிர்ப்பதால் அமெரிக்கா உடனான கூட்டு போர் பயிற்சி முறித்து கொள்வதாக அதிபர் ரோட்ரிகோ அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.