சுனாமி வீட்டுத்திட்டமும் ஏற்படபோகும் ஆபத்தும் : SM சபீஸ்

சுனாமி வீட்டுத்திட்டம் அரசியல்வாதிகளின் பேசுபொருளாகவும் அரசியலுக்குள் நுழையும் புதியவர்களுக்கு அறிக்கையிடும் பொருளாகவும் மாறி இருப்பதனை நாம் அவதானிக்கிறோம்.
safees
 2004.12.26ம்  திகதி சுனாமி ஏற்பட்டதன்பின்பு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பதவிநிலையோ அல்லது சொத்து நிலையோ பாராமல் உதவி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டதே இந்த வீட்டுத்திட்டமாகும். உதாரணமாகஅம்மாந்தோட்டையில் பாதிக்கப்பட்ட ஒருத்தருக்கு கண்டி மாவட்டத்தில் வீடு மற்றும் அரச தொழில் இருந்தாலும் இத்திட்டத்தின்கீழ் அவர் பாதிக்கப்பட்ட அம்மாந்தோட்டை வீட்டுக்கு  நிவாரனம்பெற தகுதியானவர் என்பதே சட்டமாகும்.
 
நுரைச்சோலையில் இருந்த அரச காணிகளில் ஒருபகுதியை மக்களுக்கு பெற்றுக்கொடுத்த  முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, மீதிக்கானிகளையும் ஏழைமக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகளை மறைந்த தலைவரூடாக  செய்திருந்த தருணம், தலைவர் அகால  மரணம் எய்தினார் (இன்னாலில்லாஹ்), அதன் பிற்பாடு அவசர அவசரமாக தனது நெரிங்கிய உறவினரான கம்பொலயை சேர்ந்த அப்சால் மரைக்கார் என்பவருக்கு  கொந்தராத்து கொடுக்கவேண்டும், தான் கொமிசன் பெறவேண்டும் என்பதற்காக உரியமுறையில் ஆவணங்கள் சேகரிக்காமல் குறைமாதகுழந்தைபோல்  வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியலால் ஆரம்பிக்கப்பட்டதே இத்திட்டமாகும். 
 
இத்திட்டம் அநீதியான முறையிலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் ஆரம்பிக்கப்படுவதாக கூறி  தவம்  அந்நேரம் இருந்த  பிரேதேச செயலாளரான சம்சுதீன் அவர்களிடம் சண்டையிட்டபோது   நானும் உடனிருந்தேன் ஆனால் ஒரே விடயத்தை இருநாக்குகள் கொண்டு பேசும் வல்லமை என்னிடம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.
 
சவூதி அரசாங்கத்தின் நிதியுதவியில் முஸ்லிம்களுக்காக மாத்திரம் வழங்குவதற்கான இவ்வீட்டுத் திட்டத்தினை இன்று அரசாங்கத்திலிருக்கும் இனவாதகட்சியான ஜாதிக ஹெல யுறுமைய பலமாக எதிர்த்ததோடு நீதிமன்றில் வழக்குத்தாக்களும் செய்தனர்.
அந்நேரத்தில் அரசுக்கு பெரும் தலையிடியாக இருந்த நீதி அரசர் சரத் சில்வா முஸ்லிம்களுக்கு எதிரான ஒருதீர்ப்பை வழங்கினார் அதாவது மாவட்ட  இனவிகிதாசார அடிப்படையில் இக்கானிகள் பகிர்ந்தளிக்கப்படுவதோடு காணிக் கச்சேரி வைத்து காணி இல்லாதவர்களுக்கே இவ்வீடுகள் வழங்கபட  வேண்டும் என்ற குறிப்பையும்  தீர்ப்பில் எழுதிருந்தார்.
 
அக்கரைப்பரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் கானப்பட்டோர்  393  பேராகும், இதில் நுரைச்சோலையில் வாழமுடியாது என பணமாக நிவாரணம் பெற்றோர்கள் போக மீதம் உள்ளோர் சுமார் 66 பேராகும், இந்நேரம் இதில் எத்தனைபேர் குறைந்துள்ளார்கள் என்பது தெரியாது,  அதிலும் காணிக்கச்சேரி வைக்குமிடத்து காணி இல்லாதோருக்கு மாத்திரமே இவ்வீடுகள் வழங்கப்படும் அப்படிப்பார்த்தால் அக்கரைப்பற்றில் காணி இல்லாதவர்கள் என்று சுமார் 10 பேருக்குள்தான் அடங்குவர் இவர்கள் மாத்திரமே இவ்வீடுகளை பெறக்கூடியதாக இருக்கும்.
 
சுனாமி வீட்டுக்காக குரல்கொடுக்கும் தலைவர்களே, உங்கள் கவனத்துக்கு
 
நீதி அரசர் சில்வாவின் தீர்ப்பின் பிரகாரம் வீடு வழங்கவேண்டும் என்றால் 8 வருடங்களுக்கு முன்னரே வழங்கிருக்க முடியும்
 
அக்கரைப்பற்று ஒரு முஸ்லிம் பிரதேச சபையாகும். எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தல்கள் வட்டார அடிப்படையில் நடைபெறவிருப்பதால் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் அமைந்துள்ள ஆலிம் நகர்  வட்டாரம் சுமார் 216 முஸ்லிம்  குடும்பங்களை கொண்டுள்ளது.
காணிக்கச்சேரியின் சொந்தக்காணி இல்லாத  இனவிகிதாசாரப்படி  400 வீடுகளுக்கு மேல் மாற்று மதத்தினருக்கு சென்றுவிடும் இதன்மூலம் அவ்வட்டாரம் மத கலப்பு உறுப்பினர்களை கொண்ட முட்டைத் தொகுதி வட்டாரமாக மாறிவிடும்.
 
அவ்வாறில்லாமல் பழைய விருப்பு வாக்கின் பிரகாரம் தேர்தல் நடைபெறும் என்றாலும் கடந்த பிதேசசபை தேர்தலில் சுமார் 421  விருப்பு வாக்குகளை பெற்று ஒரு உறுப்பினர் தெரிவானதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
 
 இதன்மூலம் அக்கரைப்பற்று பிரதேச சபை மூவின மக்களுக்கும் சொந்தமான சபையாக மாற்றம் பெறுவதோடு அவர்களது மார்க்க அடையாளங்களை சபை வளாகத்துக்குள்  நிறுவுவதற்கும் இது வழிவகுக்கும்.
 
இதனை கூறுவதன் மூலம் நாங்கள் இனவாதம் பேசுவதாக எண்ண வேண்டாம் யாழ்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை உருவாக்கி தமிழர்களை தவிர்ந்த வேறு  எவரும் யாழ்பாணத்தில்  காணிகளை வாங்கமுடியாது என்று கூறியவர்கள் வாழும் நாடு இது. இச்சட்டம் இப்போது அம்பாறையில் காணப்படுகிறது அதனால் அங்கு சிங்களவர்களை தவிர வேறுயாரும் காணிகளை வாங்க முடியாது. ஆகவே வேற்றுமத மக்கள் காணிகள் வாங்கி குடியேறுவதை நாங்கள் தடுக்கவில்லை என்பதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
 தீர்வு
பழைய ஆட்சியில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை மீளாய்வு செய்து நீதி வழங்கபடுகிறது உதாரணமாக நீதி அரசி சிராணி பண்டாரநயாக அவர்களின் தீர்ப்பைக் கூறலாம் அதுபோன்று இவ்வீட்டுத்திடத்தினை சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு இப்போதுள்ள தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனுசெய்ய வேண்டும் அதன்மூலம் பெரும்பகுதி அக்கரைப்பற்று மக்களுக்கும் மீதி அண்மையில் உள்ள அட்டாளைச்சேனை ஒலுவில் அல்லது கரையோரத்தில் வாழ்ந்து இன்னல்களுக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கும் வழங்கமுடியும்.
 
இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றுவந்தால் மக்கள் ஒன்றுசேர்ந்து   இவ்வீடுகளை உடைத்தெறிந்துவிடவும் வாய்ப்புள்ளதனை நீங்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்ட வேண்டும்
 
இல்லாதவிடத்து வீதியால் சென்றதை சட்டைப்பைக்குள் எடுத்துவிட்ட கதையாக போய்விடும் என்பதனை நீங்கள் அறிவீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
 
இவ்வளவுகாலமும் இவ்வீடுகள் ஏன்  பகிர்ந்தளிக்கப்படாமல் இருந்தது என்பதனையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்கின்றோம்.