ராம்குமார், சுவாதி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்

maxresdefault

 

சென்னையில் இருந்து சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார் உடலுடன் வக்கீல் ராம்ராஜ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகத்தில் இதுவரை யாரும் 240 வோல்ட் மின்சாரத்தால் உயிரிழந்ததாக தகவல் இல்லை. ஆனால் தமிழக போலீசார் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். இது நம்பும்படியாக இல்லை.

நீதித்துறை சரியாக வழிகாட்டியிருந்தால் ராம்குமாரின் மரணம் நடந்திருக்காது. இனி ‘‘இம்மானுவேல் முதல் ராம்குமார் வரை’’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் கருத்தரங்கம் நடத்த உள்ளோம்.

ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். தமிழக போலீசாரின் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ராம்குமாரின் மரணம் மட்டுமல்லாமல், சுவாதியின் கொலை வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விசாரணைக்காக ராம்குமாரின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தும் நிலை வரலாம். அதற்கான ஏற்பாட்டுடன் ராம்குமாரின் கல்லறையை அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.