முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: ஆளுநர் அறிக்கையில் தகவல்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

jaya-and-viduasaker
                                                      வைப்பகப் படம்

இந்நிலையில் மாலை 6.40 மணியளவில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் (பொறுப்பு) மருத்துவமனைக்கு வந்தார். இதனால் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளே சென்ற கவர்னர் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் 7.15 மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்ததாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலை தேறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டேன் முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்கள் விளக்கினார்கள். சிறப்பான வகையில் சிகிச்சை அளித்து வரும் டாக்டருக்கு நன்றி தெரிவித்தார்.’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.