அக்கரைப்பற்றினை அபிவிருத்தி செய்யப்போவதாக ஒரு சில ஜோக்கர்கள் கிளம்பியுள்ளனர்

athaulla-h_fotor safees uthumalebbe

 

 அக்கரைப்பற்றினை அபிவிருத்தி செய்யப்போவதாக ஒரு சில ஜோக்கர்கள் கிளம்பியுள்ளதனை அண்மைக்காலமாக முகநூல்களில் காணக் கிடைக்கின்றது.

அக்கரைப்பற்றிற்கு இன்னும் 30 வருடங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை செய்து விட்டு அமைதியாக அதாஉல்லா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவரது காலத்தில் ஒரு கிராம பிரிவுக்கு ஒரு வேலை என்பதனை கணக்கில் எடுப்பதில்லை அது தானாகவே நடைபெறும், இப்போது நிலைமை மாறியுள்ளது எப்படி என்றால் நாய்க்கு மனித கழிவுகள் சக்கரை போன்று இருக்குமாம், அதுபோல் கிராம வேலைகளை தான் தான் கொண்டு வந்ததாக கூறி மாலை போடுவதும் கல் நடுவதும் பார்க்க சகிக்க முடியவில்லை.

 சில நேரம்  மக்கள் இதுவெல்லாம் தெரியாத முட்டாள்கள் என்று எண்ணி விட்டார்களோ?

அடுத்த ஜோக்கர் கிழக்கு மாகாண சபையின் முக்கிய புள்ளி இவர் முன்னாள் அமைச்சர்  அதாவுல்லா பதவியில் இருக்கும்போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் மேலதிக அபிவிருத்திக்காக 11 மில்லியன் பணம் ஒதுக்கினார், அதனை இப்போதுள்ள கிழக்கு மாகாண சபையின் முக்கிய புள்ளி இடைநிறுத்தி அதில் தனது ஊருக்கு 6 மில்லியனை எடுத்துவிட்டு மீதி 5 மில்லியனை அக்கரைப்பற்றுக்கு  பிச்சை போட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முக்கிய புள்ளியின் சேவை கண்டு நாங்கள் புல்லரித்து போனோம்.
இந்த நாட்டுக்கே சேவை செய்து காட்டியவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர் பலகோடி ரூபாய் பெறுமதியான பல கட்டிடங்கள் அடிக்கல் வைக்காமலே கட்டி முடிவுறும் நிலையில் இன்றும் உள்ளது உதாரணம் ஹிஜ்ரா, ஜூனியர் வித்தியாலயம், காதிரியா பாடசாலை கட்டிடங்களை கூறலாம் .

உங்களால் முடியுமென்றால் சொந்த முயற்சியில் ஒருவேலையை செய்து காட்டுங்கள்,
நீங்கள் ஆண் மகன் என்றால்?
அண்மையில் பூனை பேண்டு மூடுவது போன்று பல கட்டிடத்துக்கு அடிக்கல் வைத்தீர்கள் அதனை செய்து முடிக்க வழி உண்டா என்று பாருங்கள்,

நெல்சிப், திட்டத்தின்  கிராமத்துக்கு ஒருவேளை உலக வங்கியின் பாடசாலை கட்டிடங்கள் ஏற்கனவே அதாஉல்லா ஏற்பாடு பண்ணிவிட்டு போய்யுள்ளார் அதனை அரசு தந்தே தீரும் என்பதனை மக்கள் நன்கு அறிவர்.

 

எம்.ஸம்ஸி