அரசாங்கத்துடனான இணக்கத்தின் அடிப்படையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல்வேறு பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி திரும்பி செல்லும் போது ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் எந்த பணிகளையும் செய்வதில்லை என்பதால், அதனை மறைக்க விக்னேஸ்வரன் ஊடாக இவ்வாறன நிலைமையை உருவாக்கி வருகிறது.
நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இதனால், நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்க அஞ்சுகின்றனர்.
எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. என்னிடம் பேசிய அமைச்சர்களிடம், என்னிடம் பேசினீர்களாக என கேட்டுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.