சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் எனவும் விரைவில் இவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
லசந்த கொலை செய்யப்பட்ட 2009ம் ஆண்டில் இந்த சந்தேக நபர்கள் கொஹூவல இராணுவ முகாமில் கடமையாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லசந்த கொலை தெடர்பில் ஏற்கனவே இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லசந்தவை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட நபர் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் தொடர்பிலும் உயர்மட்ட விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.