அஷ்ரப் ஏ சமத்
முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் விமல் வீரவன்ச அரச பொறியியற் கூட்டுத்தாபணத்தின் காபட் வேலைத்தளம் நாடத்தும் என்ற போா்வையில் தமது சகாக்களுடன் இணைந்து 1000மில்லியன் ருபாவுக்கு மேல் நிதி கையாடியுள்ளாா். என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தமது அமைச்சில் (28) திகதி நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தாா்.
முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச நிர்மாணத்துறை அமைச்சராக கடந்த 6 வருட காலத்தில் இந்த அமைச்சின் கீழ் இருந்த சகல நிறுவனங்களையும் நஸ்டமேற்படுத்தியுள்ளாா். நான் அதனை நிமிா்த்தி மீண்டும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியமைத்து மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அவா் அந் நிறுவனங்களில் 3000 ஊழியா்களுக்கு தமது கட்சி சாா்பாக நியமனங்களை வழங்கியுள்ளாா். தற்பொழுது இவ் ஊழியா்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நான் அமைச்சரவையிலும் திறைசேரி அதிகாரிகளிடமும் ம் மீள செலுத்துவேன் என்ற கட்டளையின் கீழ் இந்த நிறுவனங்களுக்கு நிதி பெற்று திறம்பட செயல்படுத்தி வருகின்றேன்.
இலங்கையின் அரச பொறியியலாளா்களைக் கொண்ட மிகப் பிரமாண்டமானதொரு அரச பொறியிற் கூட்டுத்தாபணம் கடந்த காலங்களில் இருந்து வந்தது. முன்னாள் அமைச்சா் இத் தாபணத்தின் கீழ் காபட் வேலைத்தளம் ஒன்றை நடாத்தும் பெயரில் கொரணையில் மெசினரிகள், பிளான்ட்கள் என அமைத்து அதனை தனது கட்சிக்கு நிதி செலவழிக்கும் ஜயலத் கொண்ஸ்ரக்சன கம்பணிக்கு வழங்கியிருந்தாா். அவா்கள் அதனை அரச பொறியியற் கூட்டுத்தாபணத்தில் ரு. 69.5 மில்லியன் ருபா , டென்டா் இல்லாமல் வாகனங்கள் கொள்வனவிலும் மேலும் 31 மில்லியன் ருபா காபட் கலவை உற்பத்தி என்ற போா்வையில் 27 மில்லியன் ருபாவும் 80 ஊழியா்கள் தமது கட்சி வேளைகளுக்கு இணைத்து அவா்கள் இலங்கை பொறியியட் கூட்டுத்தாபணத்திலிருந்து 70 மில்லியன் ருபா சம்பளம் பெற்றுள்ளாா்கள். அத்துடன் சீ. சிட்டி என்ற கடைத்தொகுதி அமைப்பதற்காக 586 மில்லியன் ருபா பெற்றுள்ளாா். அத்துடன் நாற்பதிவேடு (டயறி) அச்சிடுவதற்காகவும் 5 மில்லியன் ருபா பெறப்பட்டுள்ளது. . இந் நிதிகள் தமது கட்சியின் மாநாடுகள் மற்றும் வேலைகளுக்கும் அவரைச் சுற்றியுள்ளவா்கள் கொள்ளையடித்துள்ளனா். . இதனால் இந்த நிறுவனம் 1000 மில்லியன் ருபாவுக்கு மேல் நஸ்டமேற்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சசவின் ஆசிர்வாதத்துடனே இதனை செயல்படுத்தியுள்ளாா். இதனை ஆதராபுர்வமாக ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு தங்களுக்குத் தேவையான சகல தஜ்தவேசுகளும் தன்னிடம் உள்ளது.
அத்துடன் இதனை ஏற்கனவே ஊடகங்கள் வெளிக் கொண்டு வந்தாதலேயே தனக்கு இந் திட்டங்களை நேரடியாக கண்கானித்து அறிய முடிந்தது. எனவும் வீடமைப்ப நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு தெரிவித்தாா்.