உதிரத்தால் வளர்த்தெடுத்த மு.காவை விட்டு உடனடியாக ஹக்கீம் வெளியேற வேண்டும்:வபா பாரூக்

kE

கிழக்கின் எழுச்சியையும், எழுக தமிழையும், சிங்ஹ லே போன்ற வெறிபிடித்த இனவாத அமைப்புடன் ஒப்பிட்டு ஹக்கீம் அவர்கள் 28.09.2016 வீரகேசரியில் கூறியிருப்பது, தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தும் வழமையான  முயற்சிகளில் ஒன்று என்பதை கிழக்கின் எழுச்சி நன்கு புரிந்து கொள்கின்றது என்று இது தொடர்பில் தனது மறுப்பறிக்கையில் கூறியுள்ளார் கிழக்கின் எழுச்சியின் ஸ்தாபகர் வபா பாரூக் அவர்கள்.
img_8788
அவர் மேலும் தெருவித்திருப்பதிலிருந்து,
கிழக்கை வடக்குடன் இணைக்கும் கோசம் தவிர்ந்த, எழுக தமிழின் ஏனைய கோரிக்கைகளை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளாகவே கிழக்கின் எழுச்சி காண்கின்றது.
ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுத்து தன் பதவியை தக்கவைப்பதற்காக முஸ்லிம்களை சிறு குழு என கேவலப்படுத்தி, பாசிஸ புலிகளின் செல்லப்பிள்ளையாய் இருந்த வரலாறு இன்னும் அழிந்திடவில்லை என்பதை ஹக்கீம் அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். 
முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் ஹகீம் அவர்களின் தொடர் துரோகங்களை இனியும் அனுமதிக்க முடியாது என்பதால்தான், முஸ்லிம்களின் குருதியை நீராய் ஊற்றி முஸ்லிம்களின் உரிமைக்குரலாய் வளர்த்தெடுத்த மு.கா. எனும் பேரியக்கத்தை எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் தரங்கெட்ட நிலைக்கு இட்டுச்சென்றதன் விழைவே கிழக்கின் எழுச்சி எனும் பேரெழுச்சியாக மலர்ந்துள்ளது என்பதை, ஹகீம் அவர்கள் அறியாவிட்டாலும் பேரினவாதிகளின் கோரப்பிடிகளுக்குள் சிக்கித் தவித்துக்ப்கொண்டிருக்கும் அத்தனை முஸ்லிம்களும் நன்கு அறிந்துள்ளனர்.
முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் ஊமையாய் இருப்பதே சாணக்கியம் என, சாவுக்கு பயந்த கேவலமான அரசியல் செய்வதைவிடவும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து மு.காவின் ஸ்தாபகக் கடமையை அச்சமின்றி செய்து கொண்டிருக்கும் கிழக்கின் எழுச்சியை இனவாதிகளென முத்திரை குத்த முயல்வதிலிருந்தே மு.கா.வுக்கு தலைமை தாங்கும் அடிப்படை தகுதிகூட தனக்கு அறவேயில்லை என்பதை மீண்டும் ஆணித்தரமாக ஹகீம் நிரூபித்துள்ளார்.
அவர் விருப்பமான ஒரு  தேசியக்கட்சியில் இணைந்து தனக்கு வேண்டிய அமைச்சுப்பதவியையும் சுகபோகங்களையும்  பெற்றுக்கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க எமது உடன்பிறப்புக்களின் உதிரத்தால் வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸை விட்டு உடனடியாக வெளியேறி மக்களிடம் ஒப்படைக்குமாறு மிகவும் பொறுப்புணர்வுடன் வேண்டிக்கொள்கிறோம்.
வபா பாறுக்
ஸ்தாபகர்
கிழக்கின் எழுச்சி