க.கிஷாந்தன்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வினை வழங்கவேண்டும் என கோரி நானுஓயா பிரதேச தோட்ட தொழிலாளர்கள் 28.09.2016 அன்று காலை 08 மணிமுதல் 10 மணிவரை ரதால்ல பிரதான பாதையினை மறித்து 500 இற்கு மேற்;பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் போது 02 மணி நேரம் போக்குவரத்து சேவை தடைப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் உடனடியாக நியாயமான சம்பளத்தினை வழங்க கம்பனிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கார்லபேக், லேங்டல், ஈஸ்டல், தம்பகஸ்தலாவ, சமர்செட் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தோட்ட கம்பனிக்கு அதிகமான வருமானம் இருப்பதாகவும் தமது உழப்பினை சுரண்டுவதாகவும் கம்பனி அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் சொகுசாக வாழ்வதாகவும் அவர்களின் பிள்ளைகளை சொகுசாக வாழ்வதாகவும் தாங்களுடைய பிள்ளைகள் மிகவும் கஷ்டமாக வாழ்வதோடு பாடசாலைக்க செல்லமுடியாமல் வீட்டு வேலைக்காகவும் பங்களா வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் தாம் வாழ்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவரகள் ஆதங்கபட்டனர்.
மலையக அரசியல் வாதிகள் சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்காவிட்;டால் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினை நிறுத்துவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
அத்தோடு தோட்டங்களில் மூடப்பட்டுள்ள தேயிலை மலைகளை துப்பரவு செய்ய தோட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறும் தமக்கு தொழில் பாதுகாப்பு வழங்கபடவேண்டும் என தெரிவித்த இவர்கள் அரசாங்க மாற்றத்திற்கு தோட்ட தொழிலாளர்கள் வாhக்களித்ததாகவூம் இதன் காரணமாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாகவூம் இதன் காரணமாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ்விடயத்தில் தலையிடுமாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைவிடுத்தனர்