தொழில் சார் வல்லுனர்களின் உபதேசங்களை புறக்கனித்துஅரசியல் முடிவுகளினால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் தோல்வியிலேயே முடியும் என்பதற்கு ஒருஎடுத்துக்காட்டடுதான் ஒலுவில் துறைமுகம்.
ஒலுவில் துறைமுக வேலைத்திட்டத்திற்கும் தோல்வியில் முடிவடைந்த கிரிந்த துறைமுக வேலைத்திட்டத்திற்கும் அதன்ஆரம்பம் முதல் முடிவு வரை பல ஒற்றுமைகள் உள்ளன என்றால் மிகையாகாது.
அஷ்ரபின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டாலும் பொருளாதார மற்றும் தொழில்ங}ட்ப ரீதியில் சாத்தியப்பாடற்றதும் துரதிஷ் டவசமாக அரசியல் சூழ்நிலையாலும் அங்கிகரிக்கப்படாத ஒரு திட்டமாகவே ஒலுவில் துறைமுகத்தை கருத வேண்டியுள்ளது.
தலைவரின் மறைவுக்குப் பிறகு மங்கள சமரவீர தலைமயில் துறைமுக கட்டுமான நடவடிக்கையை தொடர்வதா? இல்லையா? என்ற முடிவெடுக்கும் கூட்டம் நடைபெற்றது.இக்காலகட்டத்தில் மு. கா. தலைவர், தே. கா. தலைவர், தே.அ. மு. தலைவி ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்களாக இருந்தும் அவர்களால் காத்திரமான பதிலைகொடுக்க முடிய வில்லை. தொடர்வதா இல்லையா என்றகேள்விக்கு என்ன பதில் கொடுத்தாலும் அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவோம் என்று நினைத்து அவர்கள் மௌணமாக இருந்திருக்க முடியும்.
இன்று ஒலுவில் துறைமுகம் மற்றும் அது சார்பான கடலரிப்பு சம்பந்தமாக அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் மூலம் தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இது ஒரு மக்கள் நலனற்ற நாட்டின் பொருளாதாரத்தில் அக்கரையற்ற அரசியல்சார்பு போக்கையே வெளிப்படுத்துகின்றது.
துறைமுக கட்டுமானத்தில் நீரோட்ட அளவீடு, அலைகளின் உயரம், அலைகளின் போக்கு, காற்றின் வேகம், மண் இடற்பெயர்ச்சி என்பன மிக முக்கியமான விடயங்களாகும்.இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இலங்கையில் மிகக்குறைவு. அதிலும் பெரும் பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
தற்போதய துறைமுகம் மிகக் குறுகிய கால சாத்தியவள ஆய்வின் பின்னரே கட்டப்பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஒரு வருட காலமும் இப்பிரதேச கடல் அமைதியான சாதாரண நிலையிலேயே காணப்பட்டது என்பது ஒரு குறிப்பிடப்பட வேண்டிய விடையமாகும். சிரேஷ்ட துறைமுக பொறியியலாளர்களின் கருத்தின்படி ஒரு துறைமுக கட்டுமானத்துக்கு ஆகக்குறைந்தது 10 வருடங்களுக்கும் குறையாத மேற்கூறிய விடயங்கள் தொடர்பான தரவுகள் தேவைப்படும். அத்துடன் இத்தரவுகளுக்கு மேலதிகமாக இப்பிரதேசத்தை அண்டி வாழும் மக்களிடமும் சரித்திரரீதியிலான இப்பிரதேச காலநிலைக்கேற்ற கடல்சார் தரவுகளும் பெறப்பட வேண்டும் என்று கூறப்டுகிறது.
மிகப்பெரிய முதலீடு செய்யப்பட்டுள்ள இத்துறைமுகத்தில் குறிப்பிடத்தக்க பிரதிபலன்களும் குறைந்தளவிலேயே கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் தற்பொழுது எதிர்கொள்ளும் கடலரிப்பு தடுக்க முடியாததும் தவிர்க்கமுடியாததும் ஆகும். கடலரிப்பை தடுப்பதற்கு கற்கள் போடப்பட்டாலும் துறைமுக நுளைவாயிலினிலும் துறைமுகத்திற்குள்ளும் மணல் நிரம்புவதை தடுக்க முடியாது. தற்போதைய மணலை அகற்றுவதற்கு 100 மில்லியனுக்கும் மேலதிகமாக தேவைப்படுவதுடன் ஒவ்வொரு வருடமும் இதேஅளவு தொடர்ச்சியாக தேவைப்படும் எனக் கூறப்படுகின்றது.இது ஒரு பிரதிபலன் அற்ற முயற்சியாக அமைகின்றது.
மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இவ்விடயம் சம்மந்தமாக தெளிவின்மையே காணப்படுகின்றது. மண்ணரிப்புக்குத் தீர்வாக சில நடைமுறைகளை பின்பற்றலாம் என சிரேஷ்ட துறைமுகதொழில்சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இயற்கையிலேயே இலங்கையின் தென்கிழக்கு கரையோரம் அதிக மணல் இடப்பெயற்ச்சிக்கு இலக்காகும் பிரதேசமாகும். ஹம்பாந்தோட்டையில் இருந்து திருகோணமலை வரைக்குமான கரையோரத்தில் துறைமுகமோ மீன்பிடிதுறைமுகமோ கட்டுவது சாத்தியமான ஒன்றல்ல. அதை மீறிகட்டுவதானால் அதிக மண்ணரிப்புக்கு இலக்காவதும் துறைமுகத்திற்குள் மண் சேருவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போதைய நீரோட்ட தடுப்பணையினால் இயற்கையான மணல் பெயர்ச்சியானது தெற்கில் இருந்து வடக்கிற்கு இடம்பெயர்வது தடுக்கப்படுகிறது.
இதனால் துறைமுகத்துக்கு வடக்கில் கடலரிப்பும் தெற்கில்மணல் படிமமும் ஏற்படுகின்றது. வடக்கில் ஏற்படும் கடலரிப்பை தடுப்பதற்கு வடக்கு கரையோரத்துக்கு கற்கள் போடுவது பொருளாதார ரீதியில் சாத்தியப்பாடு குறைவு. ஏனென்றால் தற்போதைய மணல் பெயர்ச்சி பெரிய கல்லாறு பிரதேசம் வரைதொடரும் சாத்தியமிருக்கின்றது. அதாவது கற்கள் போடப்பட்டு முடிவடையும் இடத்தில் இருந்து (வடக்குநோக்கி) கடலரிப்பு தொடரும்.
இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் இதே நிலமைஏற்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து மொறட்டுவைவரை காலத்துக்குக் காலம் கற்கள் போடப்பட்டன ஆனால் அது முழு வெற்றியளிக்கவில்லை.
எனவே கடலரிப்புக்கு கற்கள் போடுவது நிரந்தர தீர்வாகாது.கற்கள் நிரப்புவதினால் இப்பிரதேச இயற்கை கரையோரத்தை மாற்றுவதுடன் இப்பிரதேசத்தின் பாரம்பரியதெழிலில் ஒன்றான கரைவலை மீன்பிடியையும் அழிவடையச்செய்யும்;. ஒலுவில் துறைமுகத்தில் இருந்து நிந்தவூர் காரைதீவு வரையான கடல்பரப்பில் உள்ள கரைவலை மீன்பிடி ஆரம்பத்தில் மிகவெகுவாக அழிவடையும். தற்பொழுது ஒரு கரைவலை மீன்பிடி படகினால் கிட்டத்தட்ட 200 வரையான குடும்பங்கள் பயனடைகின்றனர். இப்பிரதேச பதிவு செய்யப்பட்ட கரைவலை மீனவர்களின் கருத்தின்படி துறைமுகம் கட்டுவதற்கு முன்பு பெற்ற வருமானம் இன்று வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் முன்பு கொழும்புக்கு ஏற்றுமதி செய்து வந்த ஏற்றுமதியும் பாதிப்படைந்துள்ளதாகவும் பலர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே கற்கள் நிரப்பாமல், மேலதிக தடுப்பனை கட்டாமல் தற்போதைய நிலையில் Sand By Pass செய்ய முடியும். இம்முறையின் மூலம் தெற்கில் குவியும் மணல்பரப்பு வடக்குக்கு இயந்திரங்களின் உதவியுடன் செயற்கையாக மாற்றுதல். இம்முறை தொடர்ச்சியாக தேவைக்கேற்ப செய்யவேண்டும். பல துறைமுகத்தில் இரு பக்கங்களுக்கும் இம்முறையை கையாளுகின்றனர். இதற்கு ஒரு வருடத்திற்குபல மில்லியன்கள் தேவைப்படும். வருமானமற்ற அல்லது எதிர்காலத்திலும் மிகக் குறைவான சாத்தியப்பாடு கொன்ட ஒரு துறைமுகப் பகுதியில் இம்முறையும் பலனளிக்காது.
இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் செய்யாமல் இத்துறைமுகத்தை பாவிக்காமல் விட்டால் தற்போதைய கடலரிப்பானது துறைமுகத்தின் உள்ளக பரப்பு முற்றாகமணலால் நிரம்பும் வரை தொடரும். இதனால் ஒலுவில் பல்கலைக்கழகம் முதல் நிந்நவூர் வெளவால் ஓடை வரையான பிரதேசத்தை கடலரிப்பின் மூலம் இழக்க நேரிடும். இது நடைபெற்றதன் பிற்பாடு மீண்டும் மணல்பெயற்சியின் மூலம் இழக்கப்பட்ட பிரதேசம் இயற்கையாகவே மணலால் நிரப்பப்பட்டு பழைய நிலைக்கு திரும்பி நிலம் உருவாகும். இச்செயன்முறை இடம்பெற மிக நீண்ட காலம் தேவைப்படும்.
இறுதியாக எடுக்கக்கூடிய முடிவுதான் ஒலுவில் துறைமுகதிட்டத்தை தோல்வியான திட்டமாக அரச வர்த்தமானி மூலம் அறிவித்தல். இது மிகவும் செலவு குறைந்த செயற்திட்டமாகும்.
இதன் பிரகாரம் கட்டப்
தூரநோக்கு திட்டமற்ற அரசியலுக்
பெரும் செலவில் ஆரம்பிக்கப்பட்ட
அலிஃப் சப்ரி ஹசன் அலி