தேர்தல்கள் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுக்க அரசுக்கு முடியாது : சஜித் பிரேமதாச

தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுக்க அரசுக்கு முடியாது என்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசு அமைத்துள்ள சுயாதீன ஆணைக்குழுவின் காரணமாக தேர்தல்களை நடத்ததுமாறு அரசோ அல்லது அரசு அல்லாத அமைப்போ தேர்தல்களை நடத்துமாறுஅச்சுறுத்தல் விடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அம்பலந்தொட்ட பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்தும் சாத்தியம் இல்லை என தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

அத்துடன் இந்த வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர் உள்ளடங்கியுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காலஎல்லை இந்த மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.