திஸ்ஸ அத்தநாயக்க கட்சியில் மீண்டும் இணைவது தனக்கு பிரச்சினையில்லை : பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக செயற்பட்டு ரீதியான அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பாக திஸ்ஸ அத்தநாயக்க, நடுநிலையாளர் ஒருவர் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க கட்சியில் மீண்டும் இணைவது தனக்கு பிரச்சினையில்லை என கூறியுள்ள பிரதமர், கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அத்தநாயக்க, சுகாதார அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

thissa mahinda

பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை ஒன்று இருப்பதாக கூறிய அத்தநாயக்க, போலி ஆவணம் ஒன்றை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.

இது சம்பந்தமாக திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்றும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.