எகிப்து அகதிகள் படகு விபத்தில் 115 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன!

201609232001557828_115-bodies-retrieved-after-migrant-boat-capsizes-off-egypt_secvpfகடந்த புதனன்று எகிப்தில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு எகிப்து கடலில் மூழ்கியது. அதில் 450 முதல் 600 பேர் வரை இருந்தனர். விபத்துபற்றி தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் படகுடன் விரைந்து சென்றனர். அவர்களில் 163 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.

படகு கடலில் மூழ்கியதில் 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 115 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போலீஸ் பாதுகாப்பில் உள்ளதாகவும், இத்தாலிக்கு சென்ற போது விபத்தில் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்லும்போது மத்திய தரைக்கடலில் படகு மூழ்கி பலியாவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை மத்திய தரைக் கடலில் மூழ்கி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.