இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு!

 4t2a8964_fotor

 

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தோரைமீளக்குடியேற்றுவதற்காக  அமைக்கப்பட்ட வடமாகாணமீள்குடியேற்ற செயலணி பல்வேறு சிக்கலான விடயங்கள்குறித்து கடந்த 20 ஆம் திகதி ஆராய்ந்ததுடன் எதிர்காலசெயற்பாடுகள் குறித்தும் சில முடிவுகளை மேற்கொண்டதாகசிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்மற்றும் இந்து சமய விவகார அமைச்சு விடுத்துள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக்கூட்டத்தில் மீள்குடியேற்றச் செயலணியின்இணைத்தலைவர்களான, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரஅமைச்சர் சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்ததிஸாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மாகாணசபைஉள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவும்இந்த செயலணியில் இணைத்தலைவராகப் பணியாற்றுகிறார்.

 4t2a8966_fotor

தேசியக் கொள்கைகள் உள்ளடங்களான மற்றும் அதுதொடர்பான அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகாரிகளும், பொருளாதார விவகாரம், வீடமைப்பு நிர்மாணத்துறை, தேசியபட்ஜட் திணைக்களம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும்இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

 

மீளக்குடியேறுவோருக்கான உடனடி உட்கட்டமைப்புதேவைகள், சுகாதாரம், வீட்டுத்தேவைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் பரிபாலனம், ஆகியவை தொடர்பாகவும்இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

 

அரசாங்கமும் ஐ. நா நிறுவனங்களும் கூட்டாக இணைந்துவடமாகாண மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் வகையிலானதேவைகளை மதிப்பீடு செய்வது தொடர்பிலும் இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.