ஏமாற்றம்… தொழிலாளர்கள் நிர்க்கதி..!

க.கிஷாந்தன்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை 22.09.2016 அன்று கொழும்பில் 9வது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோழ்வியுற்றது.

img_0863

கடந்த வருடம் மார்ச் 31ம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகியதையடுத்து சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு அல்லது மூன்று கட்ட பேச்சுவார்த்தையின் போது பெருந்தோட்ட கம்பனிகளால் தொழிற்சங்கத்தால் கோரிக்கை விடுத்து சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளாததையடுத்து மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள், சத்தியாகிரக போராட்டங்கள், கையெழுத்து வேட்டை போன்ற கோரிக்கையான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

அத்தோடு தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததோடு மெதுவான பணி செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டனர். தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட கொழுந்துகள் தொழிற்சாலை முன்பதாகவும், கொழுந்து மடுவங்களிலும் கொட்டப்பட்டதுடன் கொழுந்தினை தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்படாமல் காய்ந்து கருகின.

இதனால் தோட்ட தொழிலாளர்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியதோடு கடன் சுமையிலும் உள்வாங்கப்பட்டனர். இது இவ்வாறிருக்கையில் மலையக அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களிலும், மேதின கூட்டங்களிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை மையமாக கொண்டு மக்களை கூட்டங்களுக்கு அழைத்ததோடு மேடைகளில் வீர வசனங்களை மக்கள் மத்தியில் பொழிந்தனர்.

img_0877

இவர்களின் வீர வசனங்களுக்கு மயங்கிய தோட்ட தொழிலாளர்கள் கைகளை அசைத்த வண்ணம் வசனங்களுக்கு செவி சாய்த்ததை காணக்கூடியதாக அமைந்தது.

9வது கட்ட பேச்சுவார்த்தை 22.09.2016 அன்று கொழும்பில் இடம்பெற்ற போது தோட்ட தொழிலாளர்கள் அபிலாஷைகளுடன் வானொளிகளில் மற்றும் தொலைக்காட்சிகளில் நல்ல பதில் கிடைக்கும் என எண்ணத்துடன் காத்திருந்த தொழிலாளர்களுக்கு எவ்வித நல்ல பதிலும் இல்லாமல் ஏமாற்றத்தையே தந்துள்ளதாக தொழிலாளர்கள் அங்கலாகின்றனர்.

அடுத்த மாதம் 29ம திகதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் இவர்கள் தற்பொழுது தோட்ட நிர்வாகம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாத்திரமே தொழில் வழங்குவதாகவும், இதனால் தீபாவிள பண்டிகையை கொண்டாடுவதில் பெல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மலையக தொழிற்சங்கங்கள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுடன் கலந்து கொள்ளவில்லை என இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் புலப்படுவதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே மலையக தோட்ட தொழிற்சங்க அதிகாரிகள் தங்களின் கட்சியை வளர்ப்பதற்கும் சுய இலாபத்திற்காகவும், தொழிலாளர்களை பகட காய்களாக கருதாமல் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கம் செயற்படும் என உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொண்டு சம்பள அதிகரிப்பை பெற்றுத்தர வேண்டும் என தொழிலாளர்கள் கோருகின்றனர்.