ஒலுவில் மக்கள் மு.காவினரை துரத்துவது நியாயமா..??

hakeem-oluvil-860-02

ஒரு பரீட்சைக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள குறித்த நாள் வழங்கப்படும்.மாணவர்களில் அதிகமானவர்கள் அதனை பயன்படுத்த தவறிவிடுவார்கள்.பரீட்சை நெருங்கும் காலத்தில் படிப்போமென கிழம்பினால் குறித்த காலத்தினுள் தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியாது மாணவர்கள் தானாக பின் வாங்கும் நிலை தோன்றும்.இது போன்றுதான் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா பல வருடமாக இலங்கை முஸ்லிம்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்த போதும் உருப்படியாக எதுவுமே செய்யவில்லை.தற்போது மு.காவிற்கு எதிரான எதிர்ப்புகள் கிளம்பி மு.கா அழிக்கப்போகிறதென மு.காவினர் அறிந்ததும் மு.காவினருக்கு ஞானம் பிறந்து ஏதாவது செய்வோமென செல்லும் போது  மு.கா எதைச் செய்வது எதை விடுவது என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி ஒலுவில் சென்ற மாகாண அமைச்சர் நஸீரை அம் மக்கள் பாதையை இடைமறித்து கூக்குரலிட்கு துரத்துயுள்ளனர்.ஒலுவிலிலுள்ள பிரச்சினையை நாடே அறியும் போது அங்கு அடிக்கடி செல்வது அந்த மக்களை வெறுப்படையச் செய்யும்.இங்குள்ள பிரச்சினை இன்று நேற்று தோற்றம் பெற்ற ஒன்றல்ல.அங்கு பல வருடங்களாக பிரச்சினை உள்ள போதும் தற்போதே மு.கா அதனை திரும்பி பார்த்துள்ளது.இருப்பினும் ஒலுவில் பிரச்சினை மாகாண சபை மூலம் தீர்க்குமளவு சிறிய பிரச்சினையல்ல.அதனை மத்திய அரசிலுள்ளவர்கள் தான் செய்ய முடியும்.இங்கு மக்களின் வெறுப்பில் மாகாண அமைச்சர் நஸீர் அகப்பட்டுக்கொன்டாலும் அது அவருக்கு மக்களால் வழங்கப்பட்ட எச்சரிக்கையல்ல மாறாக மு.கா என்ற கட்சிக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையாகவே நோக்க வேண்டும்.மாகாண அமைச்சர் நஸீர் சிறந்த சேவை மனப்பாங்கு கொண்டவர்.மு.காவின் இயலாமையால் .அவர் அவமானப்பட்டுள்ளார்.

14408283_663552687145860_2033229338_o

இத் துறைமுகத்திற்காக 2008ம் ஆண்டளவில் நாற்பத்தெட்டு மக்கள் காணிகள் அரசால் நிர்பந்தமாக சுவிகரிக்கப்பட்டிருந்தது.இது வரை இக் காணிகளுக்கான சரியான நிவாரணம் அரசால் கூறப்பட்ட வகையில் கூட வழங்கப்படவில்லை.இதனைக் கூட இற்றை வரை பெற்றுக்கொடுக்க  இயலாதவர்களால் நிச்சயம் பெருந் தொகை பணத்துடன் வழங்க வேண்டிய இச் சேவையை செய்ய முடியாது.

அண்மையில் அமைச்சர் றிஷாத் தனிப்பட்ட முறையில் பிரதமருடன் பேசி ஒலுவிலுக்கு நிதி ஒதுக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.இதனை அறிந்த அமைச்சர் ஹக்கீம் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.இதன் போது இதனை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது இவ் விடயம் வேறு பக்கம் திசை திரும்பியிருந்தது.இதன் விளைவாக அமைச்சர் றிஷாத்தினால் அத் திட்டத்தை செயற்படுத்த முடியவில்லை.இவர்களை மக்கள் துரத்தாமல் விடலாமா?

கடந்த முதலாம் திகதி பாலமுனையிலும் இது போன்று மக்கள் மு.காவினரை எதிர்த்த சம்பவம் அரகேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.