புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடைபெற்றால் அதை தோற்கடிப்போம்

wimal-weerawansa

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ கிரிமிட்டியான பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து விட்டு அடுத்த வருட ஆரம்பத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க கூட்டு எதிர்க்கட்சியினர் தயாராக இருப்பதாகவும் வீரவங்ச கூறியுள்ளார்.