ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வகையில் யாழில் புதிய சிறைச்சாலை

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வகையில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கருத்து வெளியிடுகையில்,

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் குறித்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர்,

சிறைச்சாலைக்காக அமைக்கப்படவுள்ள கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதேவேளை அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதியில் மட்டும் 130 கைதிகளை தடுத்து வைக்க முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலைக்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் 623.32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.