எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது முர்ஸிக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியாக கருதப்படும் முர்ஸி ஒரு வருட ஆட்சிக்காலத்தின் பின்னர் 2013 ஜூலை 3 ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.
இதனையடுத்து எகிப்தின் இராணுவத் தளபதியாகவிருந்த அப்துல் பத்தாஹ் அல் ஸிஸி அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதுடன் முர்ஸி உட்பட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
அத்துடன் முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை கலந்த நடவடிக்கைகளின்போது1400 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
முர்ஸி மீது மூன்று பிரதான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ( வெளிநாடுகளுக்காக உளவு பார்த்தமை மற்றும் 2011 இல் முபாரக்கிற்கு எதிரான கலவரத்தின் போது சிறையிலிருந்து தப்பிச் சென்றமை ,ஆர்ப்பாட்டக்காரர்களை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இன்றைய தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது என தெரியவருகிறது.
Our Official Page : எமது செய்திகளை உடனடியாக பெற மேலுள்ள எமது Facebook Page ஐ Like செய்யவும்.
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.