மறைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்ருகிற்கு எதிரான வழக்கினை நிறைவு செய்து கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சரத் ஆப்ரூக் அண்மையில் தனது வீட்டு மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
இதன்படி குறித்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்ற வேளை, பிரதிவாதி உயிரிழந்துள்ள நிலையில் வழக்கை நிறைவு செய்து கொள்ளுமாறு, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கமைய வழக்கு விசாரணைகளை நிறைவு செய்து கொள்வதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் பிரகாரம் நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே என குறிப்பிட்ட நீதாவான் இதன்படி ஆப்ரூவும் நிரபராதியே என சுட்டிக்காட்டினார்.