இலங்கையில் மதுபானம் அருந்தும் பெண்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது இலங்கையில் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் பாவனைக் குறைந்துள்ள போதிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது இடம்பெற்று வரும் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் போதையற்ற நாடாக இலங்கையை மாற்றும் பொதுவான சவாலுக்கு முகங்கொடுக்க அனைவரும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப் பொருள்கள், மதுபானம், புகைத்தல் போன்ற காரணங்களினால் தினமும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக விபரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப் பொருள் பழக்கங்கள் காரணமாக அதிகளவானோர் நோய்களுக்கு உள்ளாகின்றனர். அந்த எண்ணிக்கை கணக்கிட முடியாது.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் போதைப் பொருள் மற்றும் மதுபான பாவனை அதிகரித்து காணப்படுகிறது.
அங்கு ஏற்பட்டுள்ள நிலைமையை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி உட்பட பலர் விளக்கியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.