உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு மேலதிகமாக மாகாணசபைத் தேர்தல்களும் அடுத்த ஆண்டு நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக மூன்று மாகாணசபைகளினதும் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகவும், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளினதும் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியீட்டச் செய்யக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் வலுவான அரசியல் சக்தியாக சுதந்திரக் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.