‘ஈரா­னியர்கள் முஸ்­­லிம்கள் அல்லர்’ என சவூதி அரே­பி­யாவின் பிர­தம முப்தி தெரிவிப்பு

 

file-09-grand-mufti-001

‘ஈரா­னியர்கள் முஸ்­­லிம்கள் அல்லர்’ என சவூதி அரே­பி­யாவின் பிர­தம இமாம் முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் தெரி­வித்­துள்­ளார். 

சவூதி அரே­பியா தொடர்பில் ஈரா­னிய ஆன்­மிக தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி வெ ளியிட்ட காட்­ட­மான அறிக்­­கைக்கு பதி­ல­ளிக்கும் வகையில் ‘மக்கா டெய்­லி’ பத்­தி­ரி­­கைக்கு அளித்த செவ்­வி­யி­லேயே இதனைத் தெரி­வித்­துள்­ளார்.

‘இவர்கள் முஸ்­லிம்கள் அல்லர்’ என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.

அவர்கள் ‘மெஜி’யின் ( கிழக்­கி­லிருந்து கிறிஸ்­து­வுக்கு காணிக்கை கொண்டு வந்த மூன்று அறி­ஞர்கள்) பிள்­ளை­களே.

இவர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குறிப்­பாக சுன்­னாவை பின்­பற்­று­கின்ற மக்­க­ளுக்கு எதி­ராக போர் தொடுப்­பது ஒன்றும் புதிய விட­ய­ம­ல்ல” என்றும் பிர­தம இமாம் முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் மேலும் தெரி­வித்­துள்­ளார். 

கடந்த வருடம் மினாவில் இடம்­பெற்ற சன­நெ­ரி­ச­லை­ய­டுத்து ஈரா­னுக்கும் சவூதி அரே­பி­யா­வுக்­கு­மி­டையில் இரா­ஜ­தந்­திர ரீதியில் முறுகல் நிலை தோன்­றி­யுள்­ள­தை­ய­டுத்து இவ்­வ­ருடம் ஈரா­னி­யர்கள் ஹஜ் கட­மைக்குச் செல்­வ­தற்கு அந்­நாடு தடை விதித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­து.