யாழ்ப்பாணம் அல் ஹதீஜா முன்பள்ளி பாடசாலையின் பிரச்சினைகள் ஆராய்வு!

பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் அல் ஹதீஜா முன்பள்ளி பாடசாலையின் அடிப்படை பிரச்சினைகள் பல ஆராயப்பட்டுள்ளன.
இப்பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி நிசாரா நவாஸின் வேண்டுகோளிற்கு இணங்க இன்றைய தினம் (7)அப்பாடசாலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் விஜயம் செய்துள்ளார்.
DSCF6676_Fotor
இதன் போது பாடசாலையின் தேவைகள் குறித்து ஆசிரியர் குழாம் அமைப்பாளருக்கு தெளிவு படுத்தினர்.
இதற்கு அமைப்பாளர் மிக விரைவில் இப்பாடசாலையின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரையாடுவதாக கூறினார்.
DSCF6670_Fotor
அத்துடன் தனது சொந்த செலவில் பாடசாலைக்காக உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.