முடிந்த யுத்தத்தை நான் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாகவே எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது

மலேசியாவுக்கு செல்லும் முன்னர் அங்கு தனக்கு எதிர்ப்பான நிலைமை உருவாகும் என அறிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ள மகிந்த ராஜபக்ஸ ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.

முடிந்த யுத்தத்தை நான் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாகவே எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவர்களே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு எதிராகவே ஆர்ப்பட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிகளவான மக்கள் ஆதரவுள்ள உறுப்பினர்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கட்சியை விட்டு விரட்டுகின்றனர்.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் கடும் வெறுப்பில் உள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.