பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?

philippines-explosion-afp_650x400_51472837967

 

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான தவோ நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர், 67 பேர் படுகாயமடைந்தனர்.

அதிபர் ரோட்ரிகோவின் சொந்த நகரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வெடிகுண்டு தாக்குதலை ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு தான் நடத்தியிருக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.

விசாரணையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இயங்கிவரும் அபு சயீஃப் தீவிரவாத குழு இந்த நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய தலைமை காவல் அதிகாரி கூறுகையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு தேவையானவை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

philippines-blast