ஏறாவூறில் இடம்பெற்ற சுந்திர கிழக்கு பிரகடனம் என்ற தொனிப்பொருளில் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக மக்களுக்கு தெளிவூட்டும் பொதுக்கூட்டம் நேற்றுமாலை பரீட் மைதானத்தில் இடம்பெற்றது இதனை ஏறாவூரில் உள்ள சமூக மேம்பாட்டு கழகம் அங்குள்ள மாகாணசபை உறுப்பினர் சுபைர் அவர்களோடு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரதம அதீதி முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் (தே கா).,சுபைர் (கி.மா.உ) உதுமாலெப்பை (கி.மா.உ) ஹமீட் (செயலாளர் அ .இ .ம.கா ),அனீஸ் (கொழும்பு பல்கலைகழக அரசியல் விஞ்ஜான விரிவுரையாளர்), சபீஸ் (தே கா தேசிய ஒருங்கிணைப்பாளர்) பஹீஜ் (தே கா கொள்கை பரப்பு செயலாளர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்
அனீஸ் விரிவுரையாளர் பேசுகையில்..
புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதற்கு அஞ்சிய காலப்பகுதியில் அதாஉல்லா அவர்கள் பிரபாகரன் ஒரு கொடூரமானவன் புலி இயக்கம் ஒருபயங்கரவாத இயக்கம் அது அழிக்கப்படவேண்டும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் அறிந்துகொள்ளப்படாமல் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படவேண்டும் என்ற அவரது நேர்காணலை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது என்மேனி எல்லாம் புல்லரித்துப்போனது முஸ்லிம் சமூகத்துக்கு குரல்கொடுக்க உண்மையான ஒருதலைமை கிடைத்துள்ளது என நான் அப்போது எண்ணினேன்.
பின்னர் புலி இயக்கத்திலிருந்து கருணா பிரிந்தவுடன் கிழக்கு பிரிக்கப்பட போகுது என என் நேர்காணலில் அந்நேரம் நான் தெரிவித்திருந்தேன். அதன்பின்பு கருணா முதன்முதலாக கிழக்கு வடக்கிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார் ஆகவே கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் வடக்கோடு கிழக்கு இணைந்திருப்பதனை விரும்பவில்லை அதனால் அதாஉல்லா தான் கிழக்கை பிரித்தார் முஸ்லிம்கள்தான் இப்பிரிவினைக்கு காரணம் என குற்றம் சுமத்துவது முறையற்றதாகும்.
அதேபோன்று கிழக்கு வடக்கோடு இணைக்கப்ப்படுமானால் முஸ்லிம்கள் ஆளப்படுகின்ற அடிமைகளாக மாற்றப்பட்டுவிடுவர் அதற்காக மக்கள் விழித்தெழ வேண்டும் உங்கள் இருப்பினை நீங்கள் பாதுகாத்து உங்களது சந்ததிகளுக்கு ஒப்புவித்து செல்லவேண்டும் என கூறினார்
ஹமீட் பேசுகையில் ..
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் அமைப்பு திருத்தம் தற்போது நடைபெருக்கொண்டிருக்கிறது அது இன்னும் ஓர் இரு மாதங்களில் வெளிவந்துவிடும் அதனை துரிதப்படுத்துவதற்கு நோர்வே பிரதமர் உட்பட பாங்கி மூண் அவர்களும் வந்து செல்கின்றார்கள்.
திருத்தி அமைக்கப்பட்ட அரசியல் அமைப்பில் நிட்சயமாக முஸ்லிம்கள் குழுவாகவே காட்டப்படுவர் ஏனென்றால் முஸ்லிம்கள் வடக்கில் தமிழர்கள் 75 வீதமாக வாழ்வதுபோன்று கிழக்கில் பெரும்பான்மை கிடையாது அதேநேரம் இன்றுள்ள தலைமகள் கிழக்கு முஸ்லிம்கள் பற்றிய அக்கறை அற்றவர்களாக காணப்படுகின்றனர் அதனால் நீங்கள் அடிமைகளாக மீண்டும் மாறிவிடுவீர்கள்.
இதனை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே ஆயுதம் மக்கள்தான் நீங்கள் வடகிழக்கின் தீமைகளை, சம்பந்தன் கோரும் சுயநிர்ணய ஆட்சியின் தந்திரத்தை நீங்கள் அறிந்து கொண்டு எதிர்க்காவிட்டால் இன்னும் 100 வருடங்களுக்கு உங்களது சமூகம் அடிமைகளாக மாறிவிடும் என தெரிவித்தார.
அதாஉல்லாஹ் பேசுகையில் ..
கிழக்கு மண்ணின் சீதோஷ்ன பூகோள அமைப்புக்களை அறிந்த தலைவர்கள் இப்போது கிடையாது பணத்துக்காக எதனையும் விற்றுவிடக்கூடிய தலைவர்கள்தான் இப்போது உள்ளார்கள் இதனை நான் சொல்லவில்லை அக்கட்சிகளில் உள்ள பிரமுகர்கள் ஆதாரங்களோடு கூறுகின்றனர் அதனால் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் உங்களை நீங்கள் பாதுகாக்க தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டத்தினை இங்குள்ள சமூக அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளது என்று தெரிவித்தார்
மேலும் பேசிய அவர் மு காங்கிரசில் அக்கட்சியினையும் கட்சி உருவாக்கத்தின் தேவையினையும் அறிந்த கடைசி போராளிகளான பசீரையும் ஹசன் அலியையும் விலக்கிவிட பார்க்கின்றனர் இது ஒருவகையில் அவர்களுக்கு இறைவன் கொடுத்த ஹுகூமாக கூட இருக்கலாம் ஏனென்றால் நான் அன்று ஹகீமைபற்றி கூறியபோது இவர்கள் நம்பாமல் துரோகம் செய்தனர் இவர்களும் விலக்கப்பட்டு விட்டால் ஹகீம் தான் விரும்பியவாறு நமது மக்களை விற்றுவிடுவான்.
அக்கட்சிக்கு நேர்ந்துள்ள நிலைமையினைப்பாருங்கள் உண்மை போராளிகளை எல்லாம் துரத்திவிட்டு தமிழர் கலாச்சாரமாம் மரணத்துக்கு பட்டாசு கொளுத்துவது அவ்வாறான ஒரு குலத்தில் வந்திருக்கலாம் என நம்பபடுகின்ர ஒருத்தன் எமது தலைவனின் மரணத்தை பட்டாசு கொளுத்தி கொண்டாடினான் அவனது தாய் அருகில் உள்ள வீட்டுக்கு சென்று ரம்பையும் கருவேப்பிலையும் கேட்டுள்ளாள் எதற்காக என்று கேட்டதற்கு சனியன் அஸ்ரப் செத்துபோய் விட்டான் இப்போதுதான் என்பிள்ளைகளுக்கு விடுதலை நான் பால்சோறு ஆக்கி பகிரப்போறேன் என கூறியுள்ளாள் இப்படிப்பட்டவர்கள்தான் இன்று மு காங்கிரசில் உள்ளனர்,
ரணில் வாய்திறந்து நான் வடகிழக்கை இணைக்கமாட்டேன் என்று கூறட்டும் எங்களது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்கிறோம் ஆனால் ரணில் கூறமாட்டார் ஏனென்றால் டயஸ் போராவிடமும் நோர்வையிடமும் வாங்கியவைகளை அவரால் திருப்பிக்கொடுக்க முடியாது என தெரிவித்தார்
ஜமால்டீன்