ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை கருத்து வெளியிட வேண்டாம் : மஹிந்த

file image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்புபடுத்தி பெடரல் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற ஊழல் மோசடி தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிடுவதனை தவிர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சி குழுவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்து போதும் அதன் கஷ்டம் என்ன என்று இந்த நாட்களில் தனக்கு நன்கு தெரியும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை தொடர்புபடுத்தி சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரையில் இது தொடர்பில் கருத்து வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமகால ஜனாதிபதி 2009ம் ஆண்டு விவசாய அமைச்சராக செயற்பட்ட போது, அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரு நிறுவனங்களிடம் இலஞ்சம் பெற்றதாக பெடரல் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.