(வீடியோ) முஸ்லிம்களின் உரிமைகளை உள்ளடக்காத தீர்வு திட்டம் வெற்று கோஷமாகவே இருக்கும் : சேகு

 

இலங்கை அரசியலிலே முக்கிய பேசும் பொருளாக சம காலத்தில் பேசப்படும் விடயமான வடகிழக்கு இணைக்கப்படும் விடயத்தில் சிறுபான்மை சமூகமாக வட-கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அரசியல் அதிகாரம் சம்பந்தமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தவிசாளரும், 1990ம் ஆண்டு தனது முயற்சியினால் விதலை புலிகளின் அச்சுருத்தலில் இருந்து வடகிழக்கு முஸ்லிம் சமூகத்தினை பாதுகாத்தவரும்,  முன்னாள் அமைச்சரும் தற்பொழுதைய முஸ்லிம் தேசிய முன்னணியின் செயலாளருமான வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸடீனை நேரடியாக சந்தித்து பல கேள்விகளை தொடுத்த பொழுது அவர் வடகிழக்கு இணைக்கப்படுமானால் முஸ்லிகளுக்கு சமஷ்டி எனும் அரசியல் அதிகாரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறிய கருத்துக்கள் வருமாறு…

segu issadeen cegu

 

வடக்கு –கிழக்கு தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சி ஆதிகாரம் வழங்கப்படும் பொழுது வடக்கு –கிழக்கு முஸ்லிம்களுக்கும் சமஷ்டி ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழரசு கட்சியினதும், தமிழர் விடுதலை கூடணியினதும் உத்தரவாதங்களுக்கு அமைவானதாகவே செய்யப்படுகின்றது என்று கலைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலை வேதாந்தி சேகு இஸ்ஸடீன் கூறியுள்ளமையாது எதார்த்தமாகம் இருக்கும் அதே இடத்தில், உண்மை வடிவமாக உள்ளதனை ஒட்டு மொத்த வட- கிழக்கு சிறுபான்மை தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது புலப்படும் விடயமாகின்றது.

முஸ்லிக்களுக்கான இணைந்த வட-கிழக்கில் சமஸ்டி ஆட்சி அதிகாரத்தினை பற்றி மேலும் தனது கருத்தினை கூறிய வேதந்தி சேகு இஸ்ஸடீன்… 1956ல் தமிழரசு கட்சியின் நான்காவது மாநாட்டிலே பிரசித்தி பெற்ற திருமலை தீர்மானத்தில் தமிழர்களுக்கு சுயாட்சி தமிழரசும், முஸ்லிம்களுக்கு சுயாட்சி முஸ்லிம் அரசும் என்று இணக்கம் காணப்பட்டது. முஸ்லிம்கள் இணைந்த வட-கிழக்கில் தாம் பெரும்பான்மையக வாழும் நிலப்பரப்பில் தமக்கென்று ஒரு தனியான சமஷ்டி ஆட்சியினை நிறுவும் கோரிக்கை அந்த இணக்கத்தின் அடிப்படையில் முன்வைப்பது.

இந்த திருமலை தீர்மானத்தினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழர் விடுதலை கூட்டணியின் 1977ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதுடன் எந்தவொரு பிரதேசமோ அல்லது எந்தவொரு சமயமோ மற்றொரு சமயத்தினை. அல்லது மற்றொரு சமயத்தினை அடக்கி ஆளுவதற்கு வாய்ப்பு கிடைக்காத விதத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும் மக்களுக்கென சுவிட்சலாந்தில் உள்ளதை போன்று சமஷ்டி ஆட்சி முறை நிறுவப்படும் என்று கூறியிறுக்கின்றது. குறிப்பாக தமிழீழ அரசியல் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சி முறை ஏற்படுத்தப்படும். தமது விருப்பத்தின் பெயரில் பிரிந்து செல்லும் வகையில் அவர்களுடைய சுயாதீனத்தினை பாதுகாப்பதற்கு, தமிழர் விடுதலை கூட்டணி உத்தரவாதம் அளிக்கின்றது என்றும் தமிழர் விடுதலை கூட்டணி அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.

இந்த தமிழர் விடுதலை கூட்டணியின் உத்தரவாதத்தினை பெரிதும் கிலாகித்து 1977ம் ஆண்டின் பொது தேர்தலின் பொழுது வடக்கு- கிழக்கு முஸ்லிம்கள் தமிழர் விடுதலை கூடணியில் முஸ்லிம் வேட்பாளர்களையும் நிறுத்தி போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தனர்.அந்த தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி பெரும்பான்மையான ஆசணங்களை பெற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தினை அமரர் அமிர்தலிங்கம் பெறுவதற்கு முஸ்லிம்களும் பெரும் பங்காற்றியிருந்தனர் என்பது அழிக்க முடியாத வரலாறாகும்.

தமிழர் விடுதலை கூட்டணியும் தமிழ் சமூகமும் எமக்கு அன்று உத்தரவாதமளித்துள்ள அதே விடயத்தைதான் நாம் கூறுகின்றோம். முஸ்லிம்களின் விருப்பத்தின் பெயரில், பிரிந்து செல்லும் அடிப்படையில் முஸ்லிம்களினுடைய சுயாதீனத்தினை பாதுகாப்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி அளித்த உத்தரவாதத்தில் திருப்தியுற்று, சரிகண்டுதான் முஸ்லிம்களுக்கான சமஷ்டி ஆட்சி அதிகாரத்திற்கான முன் மொழிவுகளை நாம் முன் வைக்கின்றோம். நான் பேசியதில் தவறு உள்ளதென்றால் முதலில் தமிழர் விடுதலை கூட்டணியினைத்தான் குற்றம் சுமர்த்த வரும் என்ற எதார்தத்துடனும் அழிக்க முடியாத அரசியல் உத்தரவாதத்துடனான வரலாற்றுடனும் விடையளித்தார் வேதந்தி சேகு இஸ்ஸடீன்.

அத்தோடு தமிழ் தேசியத்தினால் 1956இலும் 1977இலும் முன்வைக்கப்பட்ட சுயாட்சி தமிழரசும் சுயாட்சி முஸ்லிம் அரசுக்கும் ஆதரவளிப்பதனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களும், தமிழர்களும் அடைய கூடிய நன்மைகளும் அந்தஸ்துகளும் அதிகமாக இருக்கும். இந்த ஏற்பாடுகளை தமிழ் தேசியத்திற்கு முஸ்லிம் தேசியம் அறிவித்து இரு தேசியங்களும் ஒன்றிணைந்து மேற்சொன்னவாறான தீர்வு திட்டத்தினை முன்வைத்து தத்தம் தனியானதும், கூட்டானதுமான அபிலாஷைகளை அடைவதே சிறந்த ஏற்பாடாகும்.

இந்த ஏற்பாட்டிற்கு தமிழ் தேசியம் இணங்க மறுத்து தாம் முஸ்லிம்களுக்கு 1956இலும், 1977இலும் எழுத்து வடிவில் அளித்த உத்தரவாதங்களை கைகழுவி விடுமாக இருந்தால் அதற்கு பின்னர் அவர்களோடு இணைந்து செயற்பட எண்ணுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. அதன் பின்னர் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி முஸ்லிம்கள் தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்.

வடக்கு –கிழக்கு தமிழ் மாநிலத்தில் மொத்த வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளை உள்ளடக்காத எந்த ஒரு தீர்வு திட்டமும் வெற்று கோஷமாகவே இருக்கும். முஸ்லிம்கள் மட்டுமல்லாது தமிழர்களும் சிந்தித்து செயற்பட்டு தமிழ் ,மாநிலத்தில் தமிழ்- முஸ்லிம் உறவுகளை சீர் செய்துகொள்ள தம்மால் ஆன விட்டுக்கொடுப்புக்களையும், தியாகங்களையும் செய்ய முன்வர வேண்டும் என்று கடைசியாக வேண்டிக்கொண்டார் முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸடீன்.

முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தவிசாளர் சேகு இஸ்ஸடீன் இணைந்த வடகிழக்கு முஸ்லிம்களுக்கான அதிகாரம் பற்றி கூறிய கருத்துக்களின் காணொளி எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்