ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய தலையிடி

apple

அயர்லாந்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு வரிச்சலுகை வழங்கும் வகையில் அயர்லாந்து அமைச்சர்கள் ஒப்பந்தம் செய்ததாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியிருந்தது. 

இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டாக விசாரணை நடத்தி வந்த ஐரோப்பிய ஆணையம், தீர்ப்பளித்தது. 

கடந்த 2003ல் ஆப்பிள் நிறுவனம் ஒரு சதவீத வரி செலுத்திய ஆப்பிள் நிறுவனம், 2014ல் 0.005 சதவீத வரி மட்டுமே செலுத்தியுள்ளது.

இந்நிறுவனம் அயர்லாந்தில் தலைமை அலுவலகம் அமைத்தது பெயரளவில்தான் உள்ளது. 

இந்நிறுவன ஒப்பந்தம் சட்ட விதிகளுக்கு எதிரானது. 

எனவே வரி பாக்கியாக 1,300 கோடி யூரோ (சுமார் 212,000 கோடி இலங்கை ரூபாய் ) வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.