ஒரு நாள் போட்டிகளுக்கு இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான்..!

Tillakaratne Dilshanஇலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள்போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார்.

1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

251071

இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக்களை பெற்று கொண்டுள்ளார்.

துடுப்பாட்டம்,பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் விக்கெட் காப்பாளராகவும் தமது திறமையினை இலங்கை அணி சார்பாக வெளிப்படித்தியுள்ளார்.

251073

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தம்புள்ள மைதானத்தில் இடம்பெறும் பகலிரவு போட்டி இதுவென்பதும்குறிப்பிடத்தக்கது.

தனது கடைசி  ஒரு நாள் போட்டியில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்