19 ஆவது சார்க் உச்சி மாநாடு பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளது !

SAARC-Logo-member-countries19 ஆவது சார்க் உச்சி மாநாடு பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி மற்றும் 10 ஆம் திகதி இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் செரிப் அறிவித்துள்ளார்.

மாநாட்டின் உறுப்பு நாடுகளாக இலங்கை,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் உள்ளடங்குகின்றன.

மேலும் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக 9 மேற்பார்வையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துக் கொண்டு இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடுவார் என்றும் பாகிஸ்தானின் வெளிநாட்டு அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெற்றிகரமான உச்சி மாநாட்டை நடத்துவதற்கு பாகிஸ்தான் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை,18 ஆவது சார்க் உச்சி மாநாடு நேபாளத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.