மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து போராட்டம்!

பாறுக் ஷிஹான்

IMI42

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இன்றைய தினம் சனிக்கிழமை(27)  காலை 9 மணியளவில்  முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப்பகுதியில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் பல்வேறு சுலோகங்களுடன் குறித்த மாகாண சபை உறுப்பினரின் செயற்பாட்டிற்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.
இதன் போது கடந்த 7 வருடங்களாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கிதாக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.
இந்த போராட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினரின் செயற்பாடு பக்கச்சார்பானது எனவும் அவர் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தை அரசியல் சாயம் பூச முயற்சிப்பதாக பகிரங்கமாக ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.
இந்த போராட்டமானது  இன்று மாகாண சபை உறுப்பினர் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  காலை  நடாத்தவுள்ள யாழ்ப்பாணம்  கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வினை பகிஸ்கரிப்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.