ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக பான் கீ மூன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கின்றார்.
எதிர்வரும் 31ம் திகதி பான் கீ மூன் இலங்கை சென்றடைவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை பான் கீ மூன் சந்திக்க உள்ளார்.
நீடித்து நிலைக்கக்கூடிய இலக்குகள் தொடர்பிலான மாநாட்டில் பான் கீ மூன் உரையாற்ற உள்ளார்.
இலங்கை பயணத்தின் போது பான் கீ மூன் வடக்கிற்கும் செல்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.