நானுஓயா நகரம் குப்பைகளால் துர்நாற்றம்..!

IMG_9244_Fotorக.கிஷாந்தன்

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானுஓயா நகரம் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளினால் அதிகமாக விரும்பப்படும் நகரமாகும்.

நுவரெலியா பகுதிக்கான ரயில் சேவையின் மத்திய நிலையமாக காணப்படும் நானுஓயா நகரம் வரலாற்று ரீதியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இந் நகரத்தின் பகுதி ஒன்றில் மகாத்மா காந்தியின் நினைவு மண்டபம் ஒன்றும் காணப்படுகின்றது. இந்த மண்டபத்திற்கு அருகில் பாரிய குப்பை கூழம் அகற்றப்படாமல் இருக்கின்றது.

IMG_9259_Fotor

இந்த நிலையில் அழகான இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக இப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு வீசும் துர்நாற்றங்களினால் மனம் நொந்து வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.

குறித்த குப்பை கூழம் நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது. இக் குப்பை கூழத்தை அவ்விடத்திலிருந்து அகற்றும் படி பொது மக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும். இதுவரை காலமும் நடவடிக்கைகள் மேற்கொண்டதாக தெரியவில்லை.

அதேவேளை இரவு வேளைகளில் இந்த குப்பை கூழத்தை நாடி பன்றிகள் அதிகமாக வருகின்றமையினால் இரவு வேளையில் இப்பகுதியில் பயணிப்பவர்கள பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இவ்வீதியினூடாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் நானுஓயா நாவலர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்கின்றனர்.

இதன்போது கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளை மேச்சலிட தெரு நாய்கள் கூட்டமாக இருப்பதனால் அச்சத்திற்கு இம்மாணவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர்.

அதேபோன்று பாதாசாரிகளும் பல தாக்கங்களுக்குள்ளாகின்றனர். அதேவேளை நிறைக்கப்படும் குப்பைகள் அகற்றப்படமையினால் இவைகள் பிரதான வீதிக்கு வரும் நிலை அங்கு உள்ளது.

எனவே இவ்விடத்திலிருந்து இக்குப்பை கூழத்தை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பிரதேச வாசிகள் கோரிக்கை விடுகின்றனர்.