ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளினால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டனர். ஜனாதிபதியின் தனி நிலைப்பாட்டுக்கு அமைய அவர்கள் நீக்கப்படவில்லை. கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய இது மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானமே.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளினால் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கவில்லை.
இதனால், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த வேண்டாம் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுகின்றோம் என அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.