ஜமால்டீன்
சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் நிதி ஒதுக்கீட்டில் கிராமோதய சுகாதார மற்றும் பற்சிகிச்சை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது இதில் முரணான பல சம்பவங்கள் இடம்பெற்றதனை இங்கே பார்வையிடலாம்
கட்டிடம்
அரசாங்கம் கிராமோதய சுகாதார நிலையம் என்ற பெயரில்தான் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஆனால் இக்கட்டிடத்தில் பற்சிகிச்சை என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது அதற்கான காரணம் பாடசாலைக்கு சொந்தமான இடத்தை மயக்க நிலையில் அபகரிக்க நினைத்ததாகும் .
இடம்
பாடசாலைக்கு சொந்தமான இடத்தில் அரைப்பகுதி நீர்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான பாதையில் அரைப்பகுதி என கூறப்படுகிறது ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டது நீர்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான பாதையிலாகும் இப்பகுதி முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் நிதி ஒதுக்கீட்டில் அவரது பொதுசன தொடர்பு அதிகாரியாக இருந்த சபீஸ் என்பவரால் புனரமைக்கப்பட்டு வாகனங்கள் வந்து திரும்பும் வட்ட வளைவாக (round a board ) பிரகடனப்படுத்தப்பட்டு நடுப்பகுதியில் மின்சாரக்கம்பமும் நடப்பட்டுள்ளது .
காலம்
இன்று ஞாயிற்றுக்கிழமை (20/08,2016) இக்காலப்பகுதியில் பாடசாலயில் உயர்தரப் பரீட்சை நடைபெறுவதோடு குறிப்பாக புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றது கல்வி திணைக்களம் கண்டிப்பாக எந்தவகையான நிகழ்வுகளுக்கும் தடை விதித்திருக்கிறது
ஆகவே பாடசாலை நிகழ்வொன்றை இன்று பாடசாலையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்க்கப்பட்டிருக்குமா? என்ற கேள்வி எழுகின்றது குழந்தைகளின் புலமைப்பரிசில் பரீட்சை நாளான இன்று பாடசாலையின் நுழை வாயிலிலிருந்து கட்சித்தொண்டர்களினால் கொடி கட்டி சரம் அமைத்து புகைப்பட விம்பங்கள் கூச்சலோடு கட்டப்பட்டதோடு குழந்தைகளோடு பாடசாலைக்கு வருகைதந்த தாய்மார்களை மிகவும் அசவ்கரீகத்துக்கு உள்ளாக்கியது
நோக்கம்
அமைச்சரினதும் மு கா அடிவருடிகளினதும் நோக்கம் யார் வாண்டால் என்ன யார் செத்தால் என்ன எங்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே முதன்மையாகும் ஏனென்றால் மாணவர்களின் முக்கியமான ஒருதினத்தில் அலங்காரதுடனான பொதுக்கூட்டம் நாட்டில் முக்கியமான ஒரு பதவியில் இருக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் .
பிசுபிசுத்துப்போன கூட்டம்
பாடசாலை சமூகத்தில் இருந்து யாருமே கலந்து கொள்ளாத நிலையில் அதிபர் மாத்திரம் கலந்து கொண்டார் இவர் அக்கரைப்பரில் உள்ள உள்ளூர் மு கா அரசியல்வாதியினால் முறையற்ற விதத்தில் தேசிய பாடசாலைக்கு அதிபரானவர் அதாவது தொண்டர் ஆசிரியராக கடமையில் இணைந்து கல்வி அமைச்சில் கடமை புரியும் தனது மனைவியின் சகோதரனின் உதவியுடன் அரசியல் பழிவாங்கல் எனும் பததத்தில் அதிபரானவர் ஆனால் இவர் எந்த நிறுவனத்துக்கும் தலைமை தாங்க முடியாது என்ற நிலையிலும் தேசிய பாடசாலைக்கு SLES தரம்கொண்ட அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையிலும் அதிபராக்கப்பட்டவர் அதனால் கலந்து கொண்டார் அத்தோடு பொதுக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் மாகான அமைச்சர் மற்றும் மாகான சபை உறுப்பினர்களோடு வந்தவர்களையும் சேர்த்து 80 என்ற எண்ணிக்கையை தானடவில்லை .
மக்கள் கருத்து
பாடசாலைக்கு கட்டிடம் தருவதென்றால் பாடசாலைக்குள் நிகழ்வை நடத்திருக்க வேண்டும் இது வாய்க்கால் அணைக்கட்டில் கல் நடுவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் ஏற்கனவே இவர்கள் ஜனாதிபதியை கூட்டி வருவதாக மக்களை ஏமாற்றிப் பணம் வசூல் செய்ததோடு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் 3 இலட்சம் பணத்தை செலவு செய்துவிட்டு திருப்பித்தருவதாக எம்மற்றியவர்கள் இவர்களை மக்கள் இனம்கண்டு விட்டனர் அதனால்தான் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறினர் அதேபோன்று அங்குள்ள ஓர் வாலிபர் கருத்து தெரிவிக்கையில் இவர்கள் நட்ட கல்களை ஒன்று சேர்த்தல் ஒரு வீடு கட்டலாம் இது மக்களை ஏமாற்றும் செயலாகும் கட்டிதத்தை கட்டாமல் பின்னர் வந்து அதாஉல்லா கட்டவிடாமல் தடுத்துவிட்டார் என நாவு கூசாமல் கூறுவார் என்று தெரிவித்தார்
எனது பார்வை
மக்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை பாடசாலைக்கு கட்டிடம் வழங்குவதென்றால் பாடசாலை நேரத்தில் விழா ஏற்பாடு செய்திருக்கலாம் இதில் எதோ உள்நோக்கம் இருப்பது தெளிவாகிறது அதே நேரம் பல்சிகிச்சை பிரிவு பாடசாலைக்கும் மீதிப்பகுதி பொதுமக்களுக்கும் என்று கூறப்படுகிறது இக்கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் கல்வி அமைச்சு பாடசாலைக்குள் பொதுமக்களுக்கான வைத்தியசாலையை அமைக்க அனுமதி கொடுக்காது அவ்விடத்திலிருந்து 20 மீற்றருக்குள் ஆயுள் வேத வைத்தியசாலை இருப்பதும் குறிப்பிடத்தக்கது எனவே இது நெறிமுறை தவறிய மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்
இத்தருணத்தில் ஒருவிடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும் இப்பகுதியில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் வலது கையாக கருதப்படும் சபீஸ் என்பவர் வாழும் பகுதியாகும் இவர் ஒருசில மாதங்களுக்கு முன் பாரிய ஆர்பாட்டத்தின் மூலம் நீர்வழங்கள் பிராந்திய காரியாலய பிரிப்பை தடுத்ததோடு அக்கரைப்பற்றுக்கு ஜனாதிபதி மு கா ஆதரவாளர்களோடு வரவேண்டாம் எனக்கூறி தடுத்தவர் ஆகவே சபீசை பழிவாங்குவதற்காக மாகாணசபை உறுப்பினர் ஆடும் நாடகம் இந்த பொதுக்கூட்டம் எனவும் ஒருசிலர் கூறியது எனது காதில் கேட்டது .