கொட்டகலை நகரில் கடந்த 8.8.2016 அன்று இரவு தமிழ் முற்போக்கு கூட்டணியின் விளம்பர பலகை சேதமாக்கப்பட்டது. இது தொடர்பில் கூட்டணியின் தரப்பினர் திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.
இந்த முறைபாட்டுக்கு இனங்க விசாரணைகளை முன்னெடுத்து வந்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் கடந்த இரு தினங்களாக கொட்டகலை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ.ஸ்கந்தராஜா அவரை பொலிஸ் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்ட அலய குருக்கள் தனக்கும் இந்த விளம்பர பலகை சேதமாக்கியது தொடர்பிலும் எவ்வித சம்மந்தமும் இல்லை என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இருந்தும் ஆலயத்திற்கு அருகில் இந்த விளம்பர பலகை சேதமாக்கப்பட்டுள்ளதனால் குருக்களுக்கு இவ்விடயம் தெரியும் என சந்தேகத்தின் பேரிலேயே இவர் மீது விசாரணை தொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இரண்டு நாள் விசாரணையில் தனக்கு அவமானம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கும் ஆலய குருக்கள் இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மற்றும் பொது செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
ஆலய குருக்கள் இ.தொ.காவின் ஆதரவாளர்களில் ஒருவராக எண்ணியே இவர் மீது விசாரணை செய்யப்பட்டிருப்பதாகவும், தெரியவந்துள்ளது. ஆலய குருக்களின் முறைபாட்டை ஏற்ற இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல், முன்னால் நுவரெலியா பிரதேச சபை தலைவர் எஸ்.சதாசிவன் ஆகியோர் குழுவாக திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு இது குறித்து விடங்களை ஆராய்வதற்கென அணியாக சென்றிருந்தனர்.
இதன் போது பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி இல்லாதுவிடது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வரும் வரை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தங்களின் வாகனங்களில் இருந்தனர்.
இதன்போது தலவாக்கலை பொலிஸ் நிலையத்திலிருந்து அதிகாரி ஒருவர் வருகை தந்து இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை செய்வதாகவும், நான் குருக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதன் பின் இ.தொ.கா தரப்பினர் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.
அத்தோடு இந்த நாட்டின் ஏனைய மதகுருமாருக்களுக்கு வழங்கப்படும் கௌரவம் இந்து மத குருக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வழியுறுத்தியே தாம் பொலிஸ் நிலையம் வருகை தந்ததாக இ.தொ.கா தரப்பினர் தெரிவித்தனர்.
விசாரணைகள் ஏதுவாக இருந்தாலும் எதிர்வரும் காலத்தில் குருக்களின் ஆலயத்திற்கு வந்து விசாரிக்கும் படி இங்கு வழியுறுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.