முதலமைச்சர் தேவைகளுக்கு அமைய இலங்கை மத்திய அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் முட்டாள்தனமானது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தேவைகளுக்கு அமைய இலங்கை மத்திய அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

இரணைமடுவில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு பிரதேசம் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானது என அவர்கள் நினைப்பது முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட இடமளித்து நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க காணியில் இரணைமடுவில் புத்தர் சிலை நிர்மானிக்கப்படுவதாகவும், மொத்த சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பௌத்தர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.