அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மிகப் பெரிய இந்த காட்டுத்தீயினை கலிபோர்னிய மாநில தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடும் காற்று வீசுவதால் தீயணைப்பு வீரர்களுக்கு இப்பணி சவாலாக உள்ளது.
எனிலும், சான் பெர்னார்டினோ அருகே ஏற்பட்ட காட்டுத்தீயின் ஒரு சிறிய பகுதி மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கடுமையாகப் பரவியுள்ள இந்த காட்டுத்தீயில் ஏராளமான வீடுகள் கருகியுள்ளன. பல உடைமைகள் அழிந்துள்ளன. மீட்புப் பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவை சாம்பலாக்கியுள்ள இந்த காட்டுத் தீயால், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை மூடத் தொடங்கி உள்ளனர்.