காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

காணாமல்  போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் இவ்வாறு தீர்மனரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் தொடர்பில் வழக்குத் தொடர சில வழிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதனை கூட்டு எதிர்க்கட்சி எதிர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானஙகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுவதனை விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.