வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க வன்முறையை தூண்டிவிட்டு சதி செய்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் லியோபோல்டோ லோபெஸ் மீதான வழக்கில் அவருக்கு 13 ஆண்டு, 9 மாதம், 7 நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
வெனிசுலா அரசின் அரசியக் பழிவாங்கும் போக்காக இந்த தீர்ப்பை விமர்சித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லோபெஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இதற்கிடையில், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவுத்துள்ள நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் முன்னர் விதித்திருந்த தண்டனையை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
நிக்கோலஸ் மடுரோவுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 43 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.