ஆளும்- கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கலகம் காரணமாக உரியமுறையில் விவாதம்நடத்த முடியவில்லை

ஆளும் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கலகம் செய்த காரணத்தினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்து உரிய முறையில் பாராளுமன்றில் விவாதம் நடத்த முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினர்களும் பாராளுமன்றில் கலகத்தில் ஈடுபட்டதனால் மிக முக்கியமான சட்ட மூலமொன்று தொடர்பில் விவாதம் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் குழப்புவதனைப் போன்று குழப்பி அரசாங்கத்திற்கு தேவையான வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்டுத்திக்கொண்டு ஆட்சியில் நீடிக்க நாட்டுப் பிரஜைகளை காணாமல் போகச் செய்ய அனுமதிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.