பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்!

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே சர்க்கரை நோய் உள்ளது.
Diabetes-Obat-Terapi-Diabetes-Susu-Kambing-Etawa
பொதுவாக சர்க்கரைவியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

முதல்வகை – சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது.

இரண்டாம் வகை – அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் சிலருக்கு உண்டாகும்.

நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகிறது.

தற்போது தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு ரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.

இதில் உடலைக் கெடுக்கும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு வேகமாக இருக்கும். பித்த உடற்கூறு கொண்டவர்கள் பகலில் பித்த அதிகரிப்பின் போது மது அருந்தினால் மயக்கம், வாந்தி, பிதற்றல் நிலை ஏற்படுவதுடன் மதுவில் உள்ள ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து பரவுவதால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது.

மனிதனின் உடற்கூறுகளை மாற்ற முடியாது. ஆனால் சர்க்கரை நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு உணவில் காரத்தை குறைக்க வேண்டும்.

அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது.

மன உளைச்சல், மன எரிச்சல், கோபம், பதற்றம் இவற்றைத் தணிக்க தியானமே சிறந்த வழியாகும். தியானம், யோகா இரண்டும் சித்தர்கள் அருளியதுதான்.

தியான நிலையில் சரசுவாசத்தை மேற்கொண்டால் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.