இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அமீர் வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் அடித்தார். அதை அப்பகுதியில் பீல்டிங் செய்திருந்த யாசீர் ஷா கேட்ச் பிடித்தார்.
பந்து தரையில் பட்டபின் யாசீர் ஷா கேட்ச் பிடித்ததுபோல் தோன்றியது. இதனால் 3-வது நடுவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் விக்கெட் கொடுத்தார்.
இதனால் விரக்தியடைந்து ஹேல்ஸ் நடுவரை குறித்து தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டே பெவிலியன் திரும்பினார். அவரது நடவடிக்கை ஐ.சி.சி.யின் விதிமுறையை மீறயதாக இருந்தது.
இதை ஹேல்ஸ் ஒத்துக்கொண்டார். இதனால் அவருக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.