கொட்டும் மழையில், சோக வெள்ளத்தில் அக்கினியுடன் சங்கமமாகியது வித்தியாவின் உடல் !

புங்குடுதீவில் இனம் தெரியாதவர்களின் வெறியாட்டத்தில் படு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு  மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் பூதவுடல் புங்குடுதீவு மயானத்தில் இன்று கொட்டும் மழையின் மத்தியில்  தீயுடன் சங்கமமாகியது.

புங்குடுதீவு உட்பட வேலணை போன்ற அயற் கிராம மக்களும் மாணவர்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வித்;தியாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

 புங்குடுதீவில் உள்ள அன்னாரின் வீட்டில் இருந்;து பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் எடுத்துவரப்பட்ட பூதவுடல் பாடசாலைக்க கொண்டு வரப்பட்டு  மண்டபத்தில் வைக்கப்பட்டு அங்கு பாரிய அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

 இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ். மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான தலைவர் சீ.வி.கே.சிவஞானம்  விவவசாய சுற்றுச் சூழுல் அமைச்சர் ஜங்கரநேசன் மற்றும் சபையின் உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் தலைவாகள் உறுப்பினர்கள் உட்பட  பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் சமய தலைவர்கள்  பிரதேச செயலாளர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டார்கள்.

 இறுதி நிகழ்வில் குழப்பங்கள் ஏற்படா வண்ணம் ஊர்காவற்துறை பொலிசார் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்ததுடன் வேலனைக்கு திரும்பும் அராலி சந்தியிலும் பொலிசார் கடமையில் நிறுத்தப்பட்டு இருந்தார்கள்.