முஹம்மட் இஷ்ரத்
இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடி வருகிறது. ஏற்கனவே [நடைபெற்று முடிவடைந்த டெஸ்ட் தொடரில் லஹிரு குமாரவின் அபார பந்துவீச்சால் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இடையில் நோர்த்ஹாம்டனில் நடைபெற்ற நான்கு நாட்களைக் கொண்ட 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வெற்றி கொண்டது.
இந்த நிலையில் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணிக்கும் இடையிலான 3 இளைஞர் ஒருநாள் கிரிக்கட் போட்டிகளை கொண்ட தொடரின் 1ஆவது போட்டி இன்று வோர்ம்ஸ்லி சேர் போல் கெட்டி மைதானத்தில் இடம்பெற்றது. டெஸ்ட் தொடரை வெற்றி உற்சாகத்துடன் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி களம் இறங்கியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதன் படி முதலில் ஆடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி நிர்ணயிக்கப்ட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது. இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக தலைவர் சரித் அசலன்க 96 பந்துகளை முகம் கொடுத்து 8 பவுண்டரி அடங்கலாக 70 ஓட்டங்களையும் சம்மு அஷான் 62 பந்துகளை முகம் கொடுத்து ஆட்டம் இழக்காமல் 6 பவுண்டரி அடங்கலாக 60 ஓட்டங்களையும் வணிந்து ஹசரங்க 47 பந்துகளை முகம் கொடுத்து 4 பவுண்டரி அடங்கலாக 37 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 47 பந்துகளை முகம் கொடுத்து 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 30 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக பந்து வீச்சில் ஹக் பெர்னார்ட் மற்றும் பென் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.
பின்னர் 300 பந்துகளில் 258 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய . இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி ஆரம்பம் முதல் குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கட்டுகளை இழக்க நேரிட்டது. இதன்படி அந்த அணி 40.3 ஓவர்களில் சகல விக்கட்டுங்களையும் இழந்து 149 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. . இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி துடுப்பாட்டத்தில் ஆரமப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தலைவர் மெக்ஸ் ஹோல்டன் 69 பந்துகளில் 40 ஓட்டங்களையும் ( 4 பவுண்டரி அடங்கலாக) சென் மலிக் 60 பந்துகளில் 32 ஓட்டங்களையும் ( 3 பவுண்டரி அடங்கலாக) பெற்றனர். இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணியின் பந்து வீச்சில் தமித்த சில்வா மிக அபாரமாக பந்துவீசி 10 ஓவர்களில் 2 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 28 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுங்கள வீழ்த்த திலான் பிரசான், சரித் அசலன்க மற்றும் வணிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் தம்மிடையே பங்கு போட்டனர். இதன் மூலம் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி முதலாவது ஒருநாள் போட்டியில் 108 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை 13ஆம் திகதி நடைபெற உள்ளது.