இலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் உத்தியோகபூர்வமாக நியமனம்

13987592_1887991937898671_7587278422373719241_o

இஷ்ரத் இம்தியாஸ்

 

கடந்த 6-8 மாதங்களுக்காக இலங்கை அணி அனுபவித்த மோசமான விளையாட்டின் பின் இளம் இலங்கை சிங்கங்கள் அவுஸ்ரேலிய அணியை முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்று இருக்கும் இந்த சந்தோசமான தருணத்தில் இன்று காலை இலங்கை கிரிக்கட் சபையில் இலங்கை கிரிக்கட் அணியின் புதிய களத்தடுப்பு பயிற்சிவிப்பாளராக நிக் பொத்தசை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நடையப்பெற்றது.

 இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ் இன்று முதல் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ள செய்தியை  இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

42 வயதான நிக் போதஸ், தென்னாபிரிக்க அணியின் விக்கட் காப்பளரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நிக் போதஸ் கிரிக்கட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களையும் 500 பிடியெடுப்புக்களையும் எடுத்துள்ளார்.

நிக் போதஸின் நியமனம் தொடர்பில் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில்,

“அடுத்த உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கு இலங்கை அணியை கட்டியெழுப்புவதில் எனது நிர்வாகம் குறிக்கோளுடன் செயற்படுகின்றது.இவருடைய நியமனத்தின் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த ஆலோசனையும் களத்தடுப்பு நுணுக்கங்களையும் பெற்றுத்தரும் என நம்புகின்றோம். இது இலங்கை அணிக்கு சாதகமானதாக அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலங்களில் எமது அணி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது.நிக் போதஸின் நியமனம், இலங்கை அணியின் களத்தடுப்பிற்கு தேவையான பயிற்சிகளையும் ஊக்கத்தையும் அளிக்குமென” அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற நிக் போதஸ் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ” நான் இலங்கை  கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக பொறுப்பு ஏற்றதை இட்டு மிகவும் சந்தோசம் அடைகிறேன். என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி,  எனக்கு இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை  பயிற்சியாளர் க்ரஹேம் போர்ட்டை நீண்டகாலமாக தெரியும். நானும் அவரின் பயிற்சியின் கீழ் விளையாடியுள்ளேன்.  அத்தோடு சிமோன் வில்லிசையும் நான் இங்கிலாந்தில் இருக்கும் போது நன்றாக தெரியும். இதனால் இவர்களோடு இணைந்து செயற்படவுளளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உளள்து” என்று கூறி இருந்தார்.